Site icon News now Tamilnadu

புதுக்கோட்டை மாவட்டம் மறவாமதுரை ஊராட்சி உடையாம்பட்டியில் 25 வருடம் பழைமையான நீர்த்தேக்கத்தொட்டி ஒன்று விழும் தருவாயில் உள்ளது.

இத்தொட்டி கடைசியாக 2013ல் பராமரிப்பு செய்யப்பட்டது. பிறகு எந்தவொரு பராமரிப்பும் இல்லமால் உடைந்து விழும் தருவாயில் உள்ளது.

தற்போது இந்த நீர்தேக்கத்தொட்டியை இப்பகுதி மக்கள் உபயோகப்படுத்துவதும் கூட இல்லை.

எனவே இது தானாக இடிந்து விழும்முன், பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்கள் இந்த தொட்டியை இடித்து தரைமட்டமாக்கி பேராபத்தில் இருந்து இப்பகுதி மக்களை காப்பாற்றுங்கள்.

அதே சமயத்தில் புதிய நீர்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டி இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Exit mobile version