Site icon News now Tamilnadu

புதுக்கோட்டை  மாவட்டம் நிலையபட்டி அருகே அரசு நிலங்களை  மர்ம நபர்கள்  சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக பொதுமக்கள் ஒன்று கூடி கோஷம்    எழுப்பியதால் பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா புல்வயல் ஊராட்சி நிலையபட்டி கிராமத்தில்  சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 800 ஏக்கர் அதிகமான அரசு நிலங்களை தனிநபர்கள் அபகரிக்க முயல்வாதக நிலையபட்டி கிராம பொதுமக்கள் ஒன்று கூடி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..

இது குறித்து நம்மிடம் பேசிய நிலைய பட்டி கிராம பொதுமக்கள் 260 குடும்பங்கள் இந்த நிலையபட்டி கிராமத்தில் வசித்து வருவதாகவும் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் முதல் வருவாய்த்துறையினர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ளதாகவும் வரும் ஜனவரி மாதம் பட்டா வழங்க அதிகாரிகள் கூறி இருந்ததாகவும் ஆனால் தற்போது மர்ம நபர்கள் சிலர் இடங்களை அபகரிக்க
முயற்சி செய்து அங்குள்ள மரங்களை வெட்டி விற்பனை செய்வதாகவும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோஷமிட்டவாறு கோரிக்கை…

Exit mobile version