Site icon News now Tamilnadu

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்காலங்களில் மின்சாரம் தொடர்பான பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியீடு..

பொதுமக்கள் மழைக்காலங்களில் மின்சாரம் தொடர்பான கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுமாறு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது..

1.மழைக் காலங்களில் மின்மாற்றிகள் , மின் கம்பிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகாமையில் செல்லவேண்டாம்.

2.ஈரகைகளால் மின்சாதனங்களை இயக்கக் கூடாது.

3.மின்கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம்.

4.மழைப் பொழிவின் போது மின் பாதைகளுக்கு கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும்.

5.புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் மின்வாரியம் சம்பந்தப்பட்ட இடர்பாடுகளை களைய 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண் 1912 அல்லது 18004254912 மற்றும் 04322-223452 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி உமா மகேஸ்வரி இ. ஆ.ப கேட்டு கொண்டு உள்ளார்.

Exit mobile version