Site icon News now Tamilnadu

புதுக்கோட்டை மதுரை சாலையில் ஆக்கிரமிப்பு! தனியார் திருமண மண்டபத்தில் வளாகத்தில் சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது!

புதுக்கோட்டை மதுரை பிரதான சாலை மாலையீடு முன்பு சாலையை ஆக்கிரமித்து தனியார் திருமண மண்டப நுழைவாயில் தாழ்வாரம் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது..

மேலும் திருமணங்கள் உள்ளிட்ட விசேஷ நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அப்பகுதியில் வாகனங்கள் ஸ்தம்பித்துப் போய் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றதாக கூறப்படுகிறது

இது சம்பந்தமாக அந்த தனியார் மண்டபம் நிர்வாகத்திற்கு பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை என்று வேதனையுடன் கூறி வரும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்…

இது சம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து காவல்துறை உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனப் அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்,  வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

Exit mobile version