Site icon News now Tamilnadu

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை அகற்றபடுமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி…

டாஸ்மாக் அருகே இருப்பதால் முகம் சுளிக்கும் இளம் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகள்..உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கோரிக்கை..

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே ஆலங்குடி சாலையில் பிரதான வங்கிகளான எச்டிஎஃப்சி வங்கி, சிட்டி யூனியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல்வேறு வணிக வளாகங்கள் உள்ளன..

வங்கிகள், வணிக வளாகங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் சற்று மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும்.
குறிப்பாக மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் இல்லத்தரசிகள் இளம்பெண்கள் அதிக அளவில் வந்து போய் செல்கின்றனர்..

இதற்கு இடையே ஒரு டாஸ்மார்க் கட்டிடம் பார் உடன் உள்ளது..

குடிமகன்கள் தொடர்ந்த பகுதியில் அவ்வழியே மது வாங்க போவதும் வருவதுமாக இருப்பதால் செல்லும் பெண்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு உள்ளது..

இதனால் இவ்வழியே செல்லும் பணிகளுக்குச் செல்லும் பெண்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் சேர்ந்த இல்லத்தரசிகளும் வங்கிக்கு வருபவர்களும் இந்த டாஸ்மாக்கை அகற்றிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்…

Exit mobile version