Site icon News now Tamilnadu

புதுக்கோட்டை நகர் கீழ ராஜ வீதி ஆக்கிரமிப்புகளால் சொல் இல்லா துயரத்தில் நகர பகுதி பொதுமக்கள்?

போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் புதுக்கோட்டை நகரம்

புதுக்கோட்டையில் புற்றீசல் போல் பெருகி வரும் வாகனங் களாலும்

சாலை வரை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பெரிய நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் மற்றும் டிஜிட்டல் போர்டுகளாலும்

பார்க்கிங் வசதி இல்லாத பெரிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் நகராட்சி நிர்வாகத்தாலும்

போக்குவரத்தை சீர்குலைக்கும் வகையில் பெரிய நிறுவனங்கள் முன்பாக ரோடு வரை நிறுத்தப்படும் வாகனங்களாலும்

கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது

கீழராஜவீதி வடக்கு ராஜவீதி கீழ 2ம்வீதி என பல்வேறு முக்கிய கடைவீதிகளில் முறையற்ற கார் பார்க்கிங்களாலும் போக்குவரத்து தடைபட்டு அவசர அவசியமாக உள்ள 108 ஆம்புலன்ஸ் வேன் கூட செல்ல முடியாமல் சிக்கி தவிக்கிறது

நகரில் காலை மாலை வேளைகளில் நகர போக்குவரத்து காவல் பிரிவின் ரெகவரி மற்றும் ரோந்து வாகனங்கள் சுற்றி வருவதில்லை

மேலும் முறையற்ற முறையில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவததில்லை அபராதமும் கூட விதிப்பதில்லை

இதனால் முறையற்ற வகையில் கார் பார்க்கிங் செய்யும் ஓட்டுநர்கள் அலட்சியத்துடன் மணிக்கணக்கில் பார்க்கிங் செய்துவிட்டு பர்சேசிங் சென்றுவிடுகின்றனர்..

Exit mobile version