Site icon News now Tamilnadu

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது..

நீட் தேர்வு ரத்துக்கான கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், திருமயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மற்றும் அரிமளம் ஒன்றியம், அரிமளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழாநிலைக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டைதெற்கு மாவட்ட மாணவர் அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது..

இந்த நிகழ்வில் தெற்கு மாவட்ட திமுக மாணவரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடம் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கையெழுத்து பெற்றனர்..

Exit mobile version