பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் உத்தரவு
மனு, நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, விவசாயி என்ற முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 13 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதாக கூறினார். 22 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இருவர் மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனையடுத்து, பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி சுந்தர் மோகன் உத்தரவிட்டார். இதன் மூலம் இருவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

