பாஜக சார்பில் புதுக்கோட்டை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டம் சார்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டும், பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்தது முன்னிட்டும் திலகர் திடல் பகுதியில் சேவா ஜோதி யாத்ரா நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை தலைவர் என். ராமச்சந்திரன் தலைமையில் , சிறப்பு விருந்தினர்களாக மாநிலச் செயலாளர் எஸ். சதீஷ்குமார், ஊடகப் பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜெகதீஸ்வரன் ,முன்னாள் மாவட்ட தலைவர் அ. விஜயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பழ செல்வம், ஜீவானந்தம், மாவட்ட நிர்வாகிகள் தியாகராஜன், சிவசாமி கண்டியர், குரு ஸ்ரீராம், சுந்தரவேல், சோபன் பாபு, செல்லத்துரை, கார்த்திகேயன், கமலக்கண்ணன், சண்முகசுந்தரம் ஒன்றிய தலைவர்கள் மற்றும் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், ஒருங்கிணைந்த ஒன்றிய தலைவர்கள், மாநில நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளைத்தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பாஜக சார்பில் நடைபெற்ற சேவா ஜோதி யாத்திரை பேரணி மற்றும் தீப ஒளியேற்றி சேவை ஜோதி நிகழ்ச்சி திலகர் திடல் பகுதியில் இருந்து பிருந்தாவனம் வரை பேரணியாக சென்றனர். சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் காவி சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

