Site icon News now Tamilnadu

பார்வையற்றோர்க்கு இலவச அரிசி மற்றும் பேரிடர்காலத்தில் சேவை புரிந்த சேவையாளர்களுக்கு சேவா ரத்னா விருது – நடிகர் வையாபுரி வழங்கினார்

மதுரை அவுட்போஸ்ட் அருகே தமிழ்நாடு ஹோட்டல் அரங்கில் பாரதி யுவகேந்திரா சார்பாக பார்வையற்றோர்களுக்கு இலவச அரிசி மற்றும் பேரிடர்காலத்தில் சேவை புரிந்த சேவையாளர்களுக்கு சேவா ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் தலைமையில் மதுரை மாவட்ட ஹோட்டல்கள் சங்க தலைவர் டெம்பிள் சிட்டி K.L.குமார் முன்னிலையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் வையாபுரி பார்வையற்றோர்களுக்கு இலவச அரிசி பொருட்களை வழங்கினார்,

தொடர்ந்து பேரிடர்காலத்தில் சிறப்பாக சேவை புரிந்த சேவையாளர்களுக்கு சேவாரத்னா விருது வழங்கபட்டது. நட்பாக மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் பத்திரிக்கையாளர் .காளமேகம் இவ்விழாவின் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புதூர் V.ராமகிருஷ்ணன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நெல்லை பாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version