Site icon News now Tamilnadu


நீட் தேர்வு : மேலும் ஒரு மாணவி தற்கொலை.
அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை.
நேற்று முன் தினம் நடந்த நீட் தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ளது துளாரங்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் கனிமொழி. இவர், நாமக்கல்லில் உள்ள பள்ளியில் படித்துள்ளார். கனிமொழி தனது 12-ஆம் வகுப்பில் 562.28 மதிப்பெண் பெற்று 93 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளார். மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்காக கனிமொழி தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கனிமொழி நேற்று நீட் தேர்வை எழுதினார்.

தேர்வு எழுதி முடித்த பிறகு, வீட்டிற்கு வந்த கனிமொழி தனது தந்தையுடன் இருந்துள்ளார். பின்னர், நேற்று மாலை யாரும் எதிர்பாராத விதமாக மாணவி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Exit mobile version