Site icon News now Tamilnadu

நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி: குஷ்பு

நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில், பாஜகவில் இணைந்தார். டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உடனிருந்தார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய குஷ்பு “பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி. பாஜகவில் சிறப்பாக செயல்படுவேன். தேர்தலில் பாஜக வெற்றி பெற பாடுபடுவேன்” எனத் தெரிவித்தார்.

Exit mobile version