Site icon News now Tamilnadu

நடிகர் விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு.

புதுக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளரிடம் விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் ஜெ. பர்வேஸ் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்..

நடிகர் விஜய்யை பற்றியும் அவரின் மக்கள் இயக்க பொதுசெயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் EX.MLA அவர்களை பற்றியும் அவதூராக பேசி வதந்திகளை பரப்பி வரும் ஜெயசீலன் என்பவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் மற்றும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ஜெ. பர்வேஸ் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் புதுக்கோட்டை மாவட்ட நகர உட்கோட்ட துணை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்..

மனுவை பெற்றுக் கொண்ட புதுக்கோட்டை நகர துணை காவல் கண்காணிப்பாளர் க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்…

Exit mobile version