
தேனி, தேக்கம்பட்டி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளையும் பாளையங்கோட்டை, சேலம், கோயம்புத்தூர், கடலூர், வேலூர் ஆகிய 5 சிறைகளில் தனித்தனியாக அடைக்க சிறைத்துறை முடிவு.
*முதற்கட்டமாக தப்பியோடிய கைதிகளில் 3 பேர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கைதிகளிடம் விசாரணை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, 4 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு அதிகரிப்பு!
தேனி, தேக்கம்பட்டி சிறையில் கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்.
சிறையின் 4 பாதுகாப்புக் கோபுரங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு.
எதிர்காலத்தில் கைதிகள் தப்பிக்கும் சம்பவங்களைத் தடுக்க சிறைத்துறை தீவிர நடவடிக்கை.

