Site icon News now Tamilnadu

திருமயம் தொகுதி மக்களின் மனங்களை வென்ற ‘மண்ணின் மைந்தன்’: வெற்றிக் கோட்டை நோக்கி பி.கே. வைரமுத்து!

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் பிகே வைரமுத்து!

திருமயம் தொகுதி மக்களின் மனங்களை வென்ற ‘மண்ணின் மைந்தன்’: வெற்றிக் கோட்டை நோக்கி பி.கே. வைரமுத்து!

திருமயம் சட்டமன்றத் தொகுதியில் நீண்டகாலமாக மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவராகத் திகழ்பவர் பி.கே. வைரமுத்து. கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களின் அன்பைப் பெற்ற இவர், ஐந்தாவது முறையாக இத்தொகுதியில் களம் இறங்குவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எளிய பின்னணி, வலிமையான அனுபவம், ஒரு விவசாயப் பின்னணியில் இருந்து வந்த பி.கே. வைரமுத்து, தனது உழைப்பால் பொதுவாழ்வில் உயர்ந்தவர்.

பெயர்: பி.கே. வைரமுத்து
தந்தை: குமாரசாமித் தேவர்
சொந்த ஊர்: விராச்சிலை
கல்வி: பி.ஏ. (B.A.) பட்டதாரி
வயது: 70
தொழில்: விவசாயம் மற்றும் கிரஷர் தொழில்
குடும்பம்: மனைவி இந்திரா, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

அரசியலில் அடிமட்டத்திலிருந்து உயர்ந்து வந்த இவருக்குத் திருமயம் தொகுதி அத்துப்படி. ஊராட்சி ஒன்றிய சேர்மன் முதல் சட்டமன்ற உறுப்பினர் வரை இவர் வகித்த பதவிகள் ஏராளம்

திருமயம் ஊராட்சி ஒன்றிய சேர்மன்.
திருமயம் கிராமிய மின்சார கூட்டுறவு சங்க சேர்மன்.
திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (M.L.A).
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சேர்மன்.
தற்போதைய பொறுப்பு: புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர்.

ஜாதி, மதம் மற்றும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து தொகுதி மக்கள் அனைவரிடமும் எளிமையாகப் பழகக்கூடியவர் வைரமுத்து. “நம்ம ஊர் மனிதர்” என்ற பிம்பம் தொகுதி மக்களிடையே இவருக்கு நீங்கா இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே இவர் வெற்றியைத் தவறவிட்டார். அந்தத் தோல்வி மக்கள் மத்தியில் ஒரு பெரிய அனுதாப அலையை (Sympathy Wave) உருவாக்கியுள்ளது. “தகுதியானவருக்குக் கடந்த முறை வாய்ப்பு தவறிவிட்டது, இந்த முறை அதை ஈடு செய்ய வேண்டும்” என்ற மனநிலையில் தொகுதி மக்கள் இருப்பதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

தொகுதியின் நீண்டநாள் கோரிக்கையான பொன்னமராவதி குப்பை கிடங்கு பிரச்சினைக்குத் தீர்வு காண இவர் அளித்துள்ள உறுதிமொழி, குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தான் வெற்றி பெற்றால், உடனடியாக நகரின் வெளியே புதிய கிடங்கு அமைக்கப்படும் என்ற இவருடைய வாக்குறுதி மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், அமைச்சர் ரகுபதிக்கும் பி.கே. வைரமுத்துவுக்கும் இடையே கடும் போட்டி நிலவினாலும், வைரமுத்துவின் மீதான மக்களின் தனிப்பட்ட அன்பும், கடந்த முறை இழந்த வெற்றியை மீட்டெடுக்க வேண்டும் என்ற மக்களின் ஆதரவும் அவருக்குப் பெரும் பலமாக உள்ளது.

தொகுதி மக்களின் நீண்டகாலத் தேவைகளை உணர்ந்தவர் என்பதாலும், மாவட்டச் செயலாளராகக் கட்சியை வலுவாக வழிநடத்துவதாலும், கடந்த முறை நூலிழை வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டதால், இந்த முறை தொகுதி மக்களிடையே பி.கே. வைரமுத்துவுக்கு ஆதரவான ஒரு ‘அனுதாப அலை’ வீசுவதாக அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தினர் பலமாக நம்புகின்றனர். குறிப்பாக, பொன்னமராவதி குப்பை கிடங்கு போன்ற உள்ளூர் பிரச்சினைகளுக்கு அவர் அளித்துள்ள தீர்வு வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளன.

பொன்னமராவதியில் வேலையில்லா இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்பேட்டை(சிப்காட்) அமைக்கப்படும் என்றாா்.

இதனால், இந்த முறை திருமயம் தொகுதியின் தேர்தல் களம் பி.கே. வைரமுத்துவுக்கு மிகுந்த சாதகமாக அமையும் என்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பாக உள்ளது

Exit mobile version