Site icon News now Tamilnadu

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

திருச்சி பொன்மலை ரயில்வே படிமனையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.
21- 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி, ஓய்வூதியத்தில் 40 சதவீதம் கம்யூனிட்டேஷன் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு பிறகும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர். எம்.யு. தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று ஒரு நாள் மட்டும் நடைபெறும் இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டமானது காலை 10:30 மணி முதல் நடைபெற்ற வருகிறது.

Exit mobile version