Site icon News now Tamilnadu

திமுக தலைமையகத்தில் வாய்ப்பு கோரும் டாக்டர் மு.க.முத்துக்கருப்பன்: பாரம்பரிய பின்னணி மற்றும் மக்கள் சேவையால் புதுக்கோட்டையில் ஆதரவாளர்கள் மத்தியில் பலமான எதிர்பார்ப்பு!

திமுக தலைமையகத்தில் வாய்ப்பு கோரும் டாக்டர் மு.க.முத்துக்கருப்பன்: பாரம்பரிய பின்னணி மற்றும் மக்கள் சேவையால் புதுக்கோட்டையில் பலமான எதிர்பார்ப்பு

புதுக்கோட்டை: 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், புதுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ள டாக்டர் மு.க.முத்துக்கருப்பன் அவர்களின் பெயர் தொகுதி மக்களிடையே பலமாக அடிபடுகிறது. பாரம்பர்ய அரசியல் குடும்பம் மற்றும் அசாத்தியமான சமூகப் பணிகள் இவருக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளன.

பாரம்பர்ய அரசியல் பின்னணி:
புதுக்கோட்டை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வீரையா மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர் சிதம்பரம் ஆகியோரது குடும்ப வழித்தோன்றல் என்பது இவருக்கு இருக்கும் மிகப்பெரிய பலம். இந்த பாரம்பரிய பின்னணி காரணமாக தொகுதி முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் பரவலாக அறியப்பட்ட முகமாக டாக்டர் முத்துக்கருப்பன் திகழ்கிறார்.

மக்களுடன் நின்ற மாமருத்துவர்:
மருத்துவர் அணியின் வடக்கு மாவட்ட அமைப்பாளராக இருக்கும் இவர், வெறும் பதவியோடு நின்றுவிடாமல் களத்தில் இறங்கி ஆற்றிய பணிகள் ஏராளம்:

கொரோனா கால சேவை: பெருந்தொற்று காலத்தில் எவ்வித தயக்கமுமின்றி களமிறங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது சொந்தச் செலவில் அத்தியாவசிய உதவிகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நேரடியாக வழங்கினார்.

கல்விப் பணி: பழமை வாய்ந்த சுப்பராமய்யர் நடுநிலைப்பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுத்ததுடன், அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.

அரசு மருத்துவமனைக்கு உதவி: மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் மனநலப் பிரிவில் மின் தடையால் நோயாளிகள் சிரமப்படுவதை அறிந்து, உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய UPS வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

இயற்கைப் பேரிடரும் மனிதாபிமானமும்:
சென்னையைத் தாக்கிய மிக்ஜாம் புயலின் போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அழைப்பை ஏற்று, பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2 டன் அரிசியைத் தனது சொந்த நிதி மூலம் அனுப்பி வைத்துத் தனது மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினார்.

கட்சிப் பணியும் மக்கள் தொண்டயும்:
ஆண்டுதோறும் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது கழக உடன்பிறப்புகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் வேட்டி, சேலை மற்றும் புத்தாடைகளை வழங்கி வருகிறார்.

கோடை காலங்களில் தொகுதி முழுவதும் தண்ணீர் பந்தல்கள் அமைத்து நீர், மோர், பழங்கள் வழங்கி மக்களின் தாகம் தீர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

உளவுத்துறை மற்றும் ஐபேக் (I-PAC) ரிப்போர்ட்:
தொகுதி மக்களின் செல்வாக்கு, கட்சி நிர்வாகிகளின் ஆதரவு மற்றும் இவரது தூய்மையான நற்பெயர் ஆகியவை காரணமாக, ஐபேக் டீம் மற்றும் உளவுத்துறையின் பரிந்துரைப் பட்டியலில் டாக்டர் முத்துக்கருப்பன் பெயர் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மார்ச் 2, 2026 அன்று அண்ணா அறிவாலயத்தில் இவர் விருப்பமனு அளித்தது புதுக்கோட்டை திமுகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version