தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி இருக்கிறது-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி இருக்கிறது.
லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்தி கொண்டு இருக்கிறது.
வீட்டுக்கு வீடு, கிராமத்துக்கு கிராமம் பட்டதாரிகள் இருப்பதற்கு திராவிட இயக்கம் தான் காரணம் -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டு மக்கள் இன்றைக்கு பட்டதாரிகளாக, படித்தவர்களாக உருவெடுத்துள்ளதற்கு காரணம் யார் என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
அது தெரியாமல்தான், மாற்றத்தைத் தேடி, ஏமாற்றத்தை அடைந்திருக்கிறார்கள், இந்த நிலை மாற வேண்டும்.
அரை நூற்றாண்டிற்கு முன்பு அத்திப்பூத்தாற் போல், ஒரு குடும்பத்தில் படித்தவர்கள், பட்டதாரிகள் இருப்பார்கள்.
ஆனால், இன்றைக்கு ஊருக்கு ஊர், வீட்டிற்கு வீடு பட்டதாரிகளும், மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கம் தான்.
வீடுதோறும் பட்டதாரிகளை உருவாக்கிய திராவிட இயக்கம். இந்த உண்மையை இன்றைக்கு இருக்கும் இளைஞர்கள் தெரிந்து கொள்ள மற்றும் புரிந்து கொள்ள வேண்டும் -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

