Site icon News now Tamilnadu

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் அருகே நடைபெற்றது..

இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை டவுன் டி. எஸ். பி ராகவி அவர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.. இந்த நிகழ்வில் நகர போக்குவரத்து காவல்துறையை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் வேல்ராஜ் உதவி கோட்ட பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

திருச்சி நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சிகள் உதவி இயக்குனர் சண்முகசுந்தரம் பூபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்..

இறுதியாக வாகன விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன..

Exit mobile version