Site icon News now Tamilnadu

தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் காப்பகங்களில் உள்ள குழந்தைகளை அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் படி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது

குடும்ப சூழ்நிலை வறுமை உள்ளிட்ட பல் வேறு காரணங்களால் நாடு முழுதும் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 2.56 லட்சம் குழந்தைகள் வசிக்கின்றனர்.

இதில் தமிழகம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மஹாராஷ்டிரா, மேகாலாயா, மற்றும் மிசோரம் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் 1.84 லட்சம் குழந்தைகள் காப்பகங்களில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த குழந்தைகளை அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் எட்டு மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த ஆணையத்தின் தலைவர் திரு. பிரியங் காணூங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், வறுமை காரணம் காட்டி ஒரு குழந்தையை குடும்பத்தில் இருந்து பிரித்து காப்பகங்களில் அனுமதிப்பதை ஏற்க முடியாது. வறுமை காரணமாக ஒரு குழந்தை காப்பகத்தில் வசிக்கிறது என்றால் அது சம்பந்தப்பட்ட மாநில அரசின் தோல்வியையே உணர்த்துகிறது.

குழந்தையை தங்களுடன் வைத்து பராமரிக்கும் அளவுக்கு குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டியது மாநில அரசின் கடமை.

எனவே குறிப்பிட்ட எட்டு மாநிலங்களில் குழந்தைகள் காப்பங்களில் வசிக்கும் குழந்தைகளை அவரவர் குடும்பம்களிடம் ஒப்படைக்கும் பணியினை 100 நாள் களுக்குள் மாநில அரசுகள் துவக்க வேண்டும்.

விரைவில் இந்த 8 மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து நேரடி ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர், தமிழகத்தை சேர்ந்த Dr.R.G.ஆனந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Exit mobile version