Site icon News now Tamilnadu

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு!

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அடுத்த 25 ஆண்டுகளுக்கான விரிவான நகர உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தை (CIDP) தயாரிக்க ஆலோசகர்களை நியமிக்கத் தமிழ்நாடு அரசு புதிய டெண்டர்களைக் கோரியுள்ளது. இந்த ஆய்விற்காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தொகுப்பு 1 மற்றும் தொகுப்பு 2 என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தொகுப்பு 1-ன் குழு 1-இல் கோயம்புத்தூர் (257 ச.கி.மீ), திருப்பூர் (159.35 ச.கி.மீ), ஈரோடு (109.52 ச.கி.மீ) ஆகிய மாநகராட்சிகளும், பொள்ளாச்சி (13.87 ச.கி.மீ), உதகமண்டலம் (30.67 ச.கி.மீ), உடுமலைப்பேட்டை (7.41 ச.கி.மீ) ஆகிய சிறப்பு நிலை நகராட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தொகுப்பு 1-ன் குழு 2-இல் சேலம் (91.34 ச.கி.மீ), ஓசூர் (72.41 ச.கி.மீ), கரூர் (53.26 ச.கி.மீ), நாமக்கல் (55.24 ச.கி.மீ) ஆகிய மாநகராட்சிகளுடன் கிருஷ்ணகிரி (11.50 ச.கி.மீ), தர்மபுரி (11.65 ச.கி.மீ), திருச்செங்கோடு (25.20 ச.கி.மீ) ஆகிய சிறப்பு நிலை நகராட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. தொகுப்பு 2-இல் திருநெல்வேலி (108.65 ச.கி.மீ), நாகர்கோவில் (61.35 ச.கி.மீ), தூத்துக்குடி (90.66 ச.கி.மீ), சிவகாசி (19.89 ச.கி.மீ) ஆகிய மாநகராட்சிகளும், கோவில்பட்டி (6.48 ச.கி.மீ), ராஜபாளையம் (11.36 ச.கி.மீ) ஆகிய சிறப்பு நிலை நகராட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த ஆலோசகர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு 25 ஆண்டுகாலக் குடிநீர், கழிவுநீர், போக்குவரத்து உள்ளிட்ட உட்கட்டமைப்புத் தேவைகளைத் துல்லியமாகத் திட்டமிட்டுத் தயாரிப்பார்கள்.

Exit mobile version