Site icon News now Tamilnadu

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் மேல் முறையீடு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது!

திருச்சி : ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் மேல் முறையீடு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

விலங்குகளின் காட்சி பட்டியலில் இருந்து வீட்டு வளர்ப்பான மாட்டை தற்பொழுது வரை நீக்காத காரணத்தை வைத்து மேல் முறையீடு பீட்டா அமைப்பு செய்திருக்கிறது. இதனால் காட்சி பட்டியலில் இருந்து வீட்டு வளர்ப்பான மாட்டை நீக்க வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதற்காக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் ஒண்டிராஜ் தலைமையில் இன்று டெல்லி சென்றனர்.

காட்டு விலங்குகள் அடங்கிய காட்சிப்பட்டியளில் வீட்டு வளர்ப்பான மாடு மட்டுமே அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version