Site icon News now Tamilnadu

சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ. அருணை அதிரடியாக இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ. அருணை அதிரடியாக இடமாற்றம் செய்து இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட ஏ. அருணை, தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பணிகள் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்தப் பொறுப்புகளிலும் நியமிக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் அமைதியாகவும், நடுநிலையாகவும் நடப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Exit mobile version