9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள் முன்வைத்து ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்திற்கு தலைமை மூத்த பத்திரிக்கையாளர் திரு SP. லட்சுமணன் மாநிலத் தலைவர் அவர்கள், முன்னிலை மூத்த பத்திரிக்கையாளர் திரு Z.சபீர் அகமது மாநில பொதுச் செயலாளர் அவர்கள், மற்றும் திரு சரவணன் குமார் மாநில பொருளாளர் அவர்கள்,
திரு E.C மனோகரன் துணைத் தலைவர் அவர்கள், திரு R.ரஜினிகாந்த் மாநில இணை செயலாளர், அவர்கள், திரு S.ராஜ்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் ஆதரவோடு பொதுக்குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.


