Site icon News now Tamilnadu

சந்தேக மரணமடைந்தவர்கள் உடலை கையாள்வது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு

சந்தேக மரணமடைந்தவர்களின் சடலத்தை உறவினர்கள் பார்க்கும் முன் உடற்கூறாய்வு செய்யக் கூடாது

போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த பின் தற்கொலை செய்து கொண்ட ரமேஷ் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

உடற்கூறாய்வுக்கு பின் நீதிமன்றம் செல்ல உறவினர்கள் முடிவெடுத்தால் உடலை பாதுகாக்க வேண்டும்.

மரணமடைந்தவர்கள் உடலை 48 மணி நேரம் பாதுகாத்து வைக்க வேண்டும்.

உடற்கூறாய்வு செய்யும் போது இறுதி வரை வீடியோ பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு உறுப்பும் எடுக்கும் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

இறந்தவர் உடலை உறவினர் அல்லது அவரது பிரதிநிதி பார்வையிட்டு வீடியோ எடுக்க அனுமதிக்க வேண்டும்.

எலும்பு உடைந்துள்ளதா என உறுதி செய்ய முழு உடலையும் ஸ்கேன் செய்ய வேண்டும்.

உறவினர்கள், பிரதிநிகள் உடலை பார்க்க மறுத்தால் நீதித்துறை நடுவர் அனுமதி உடன் பிரேத பரிசோதனை செய்யலாம்.

என சந்தேக மரணமடைந்தவர்கள் உடற்கூறாய்வு வழிமுறைகள் வகுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு.

Exit mobile version