ஒலிம்பியன்ஸ் குளோபல் ரெக்கார்ட்”
லோகோவை
புதுச்சேரி முதல்வர்
என். ரங்கசாமி அறிமுகப்படுத்தினார்
காரைக்குடி, மார்ச் 11-
ஒலிம்பியன்ஸ் குளோபல் ரெக்கார்ட்ஸ் லோகோ அறிமுக விழா
புதுச்சேரி மாநில முதல்வர் என்.ரங்கசாமி இல்லத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்வர்
லோகோவை அறிமுகப்படுத்தி
நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியில்
ஒலிம்பியன்ஸ் குளோபல் ரெகார்ட்சிங் தலைவர் பிரீத்தி முருகேசன், செயலாளர் ஸ்ருதி புவனேஷ்,
பொருளாளர் ஸ்ரீதேவி கார்த்திகேயன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். உறுப்பினர்கள்
சாய் அங்கயர்கனி
நித்யா, ஆகியோர் கலந்து கொண்டனர். கௌரவ விருந்தினர்களாக புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் குட்லக் முஹம்மது அப்துல்லா , செயலாளர் சங்கர்,மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழாவில்
புத்தாஸ் வீர கலைகள் ,
சாய் மகிழ் அகடமி ஆகிய அமைப்புகளின் லோகோவையும் வெளியிட்டார். பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்ட
புத்தாஸ் வீர கலைகள், வீரர், வீராங்கனைகளை பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும் என புதுச்சேரி முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக
சேது கார்த்திகேயன் வரவேற்றார். புவனேஷ் நன்றி கூறினார்.

