Site icon News now Tamilnadu

ஊழல் செய்தால் அடுத்த நிமிடமே பதவி பறிக்கப்படும் அமைச்சர் ஆனந்த் எச்சரிக்கை!

ஊழல் செய்தால் அடுத்த நிமிடமே பதவி பறிக்கப்படும்

அமைச்சர் ஆனந்த் எச்சரிக்கை..!

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி தவெக தலைமை அலுவலகத்தில் பல்வேறு கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆனந்த் பேசியதாவது:

லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை; ஊழல் செய்ய மாட்டோம் என்பதை நாங்கள் தெளிவாக தெரிவித்து கொள்கிறோம்.
ஏன் என்று சொன்னால் ஊழல் செய்தால் அடுத்த நிமிடமே பதவி பறிக்கப்படும்

ஊழல் செய்தால் அடுத்த விநாடியே எங்கள் மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுத்து விடுவார் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். ஆகவே நாங்கள் எக்காரணத்தை கொண்டும் ஊழல் செய்ய வரவில்லை; மக்களுக்கு சேவை செய்வது தான் எங்களது நோக்கமாக இருக்கும். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து,வரும் உள்ளாட்சித் தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.

மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நாங்கள் செய்ய போகிறோம். முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எல்லோரும் இன்றைக்கு கட்சியில் வந்து சேருகிறார்கள். தொகுதியில் இருக்கும் பிரச்னைகளை எங்களிடம் தெரிவித்தால் அமைச்சர்கள் உடனடியாக செய்து கொடுப்பார்கள். மாற்று கட்சியில் இருந்து வந்தாலும் தவெகவில் உரிய மரியாதை கொடுக்கப்படும்

இவ்வாறு அமைச்சர் ஆனந்த் பேசினார்.

Exit mobile version