Site icon News now Tamilnadu

உரிமை மீறல் தொடர்பான வழக்கில், சட்டமன்ற வரலாற்றில் ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தையும், மக்கள் பிரச்னைகளை சட்டமன்றத்தில் எழுப்பும் உரிமையையும் சென்னை உயர்நீதிமன்றம்  சட்டப்பூர்வமாகப் பாதுகாத்து இருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது எனக் கருத்து தெரிவித்துள்ளார்.  

அ.தி.மு.க. அரசின் குட்கா ஊழலை நாட்டு மக்களுக்குத் தெரிவித்திடவே குட்கா பாக்கெட்டுகளை சட்டமன்றத்திற்கு திமுக உறுப்பினர்கள் எடுத்துச் சென்றதாகக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், ஆனால், நீதி வழுவிய முறையில் பேரவைத் தலைவர் மூலமாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும்,   அதை சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தகர்த்தெறிந்திருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் இன்னும் குட்கா விற்பனை தங்கு தடையின்றி நடந்து கொண்டிருப்பது  தமிழகத்திற்கும் தலைகுனிவு என்றும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Exit mobile version