Site icon News now Tamilnadu

அயனாவரம் ரவுடி என்கவுண்டர் விவகாரம்- 4 காவலர்கள் இடமாற்றம்…

அயனாவரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கடந்த 21ந்தேதி ரவுடி சங்கரை பிடிக்க முயன்றபோது, அவர் காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடி சங்கரை துப்பாக்கியால் ஆய்வாளர் நடராஜன் சுட்டுக்கொன்றார்.

என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

ரவுடி சங்கர் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் முபாரக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதையடுத்து ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க  சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. மனித உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் சிபிசிஐடி விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரவுடியை என்கவுண்டர் செய்த விவகாரத்தில் தொடர்புடைய 4 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

என்கவுண்டரின்போது ரவுடி வெட்டியதாக கூறப்படும் முதல்நிலைக் காவலர் முபாரக், தலைமைக்காவலர்கள் ஜெயப்பிரகாஷ், வடிவேலு, காவலர் காமேஷ்பாபு ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

4 பேரையும் சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், வேப்பேரி. டி.பி.சத்திரத்துக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version