அம்மோனியா வாயுக் கசிவு – தமிழக அரசு சார்பில் விளக்கம்.
திருவள்ளூரில் இறால் பதப்படுத்தும் ஆலையில் பைப் லைனில் ஏற்பட்ட வாயுக்கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது.
அம்மோனியா வாயுக் கசிவு காரணமாக 5 பெண்கள் உயிரிழப்பு; 5 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு.
உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டுசென்று அடக்கம் செய்ய ஏற்பாடு.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொழிலக பாதுகாப்பு இயக்குனர் / சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட குழு விசாரணை நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆலைகளிலும் இனி இதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
54,000க்கும் மேல் தொழிற்சாலை இருக்கிறது. 6,669 அபாயகரமான தொழிற்சாலை இருக்கிறது; பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வோம்.
-110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம்.

