Site icon News now Tamilnadu

அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

குடிமராமத்து பணி என்பது ரகசிய பணி அல்ல, ஒரு பணியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் அங்கு ஊழல் என்பது குறைக்கப்படும்.

குடிமராமத்து பணிகள் குறித்த விவரங்களை அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ளும் விதமாக இணையதளம் தொடங்கி பதிவேற்ற உத்தரவு.

குடிமராமத்து பணிகள் நடைபெறுவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம், பணி முடிவடைந்த பின் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றையும் பதிவேற்ற உத்தரவு.

உத்தரவை 12 வார காலத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Exit mobile version