Site icon News now Tamilnadu

அனுமதியின்றி இருசக்கர வாகனப் பேரணி நடத்தியதாக அமைச்சர் முகமது பர்வேஸ் உள்ளிட்டோருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு ரத்து! சென்னை உயர் நீதிமன்றம்!

புதுக்கோட்டையில் அனுமதியின்றி இருசக்கர வாகனப் பேரணி நடத்தியதாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் உள்ளிட்டோருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவ.1-ம் தேதி, புதுக்கோட்டை பிருந்தாவனம்அருகே இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்து பொதுமக்களுக்கு இலவச பொருட்களை வழங்கி, பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தற்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் உள்ளிட்ட 5 பேர் மீது புதுக்கோட்டை நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் முகமது பர்வேஸ் உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘இந்த வழக்கு கடந்த ஆட்சியில் அரசியல் உள்நோக்கத்துடன் பதியப்பட்டது. எங்களால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடையூறும் ஏற்படவில்லை’ என்று தெரிவித்திருந்தனர்.

அதையடுத்து இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், அமைச்சர் முகமது பர்வேஸ் உள்ளிட்ட 5 பேருக்கும் எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version