Site icon News now Tamilnadu

அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் தொகுதிகள் எவை? – பரபரப்பான தகவல்கள்…

அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் தொகுதிகள் எவை? – பரபரப்பான தகவல்கள்…

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. தமிழகத்தில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விவரங்களை பட்டியலிட்டு வைத்து உள்ளது.

சென்னை முதல் குமரி வரை 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கட்சி அடையாளம் கண்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

சோளிங்கர், எழும்பூர், துறைமுகம், ஆயிரம்விளக்கு, கொளத்தூர், மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் முதன்மையானவையாக இடம் பெற்றுள்ளன.

கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டன்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், பாலக்கோடு, ஒட்டன்சத்திரம், பவானி, சங்கராபுரம், குளச்சல், கன்னியாகுமரி, கிள்ளியூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளும் இதில் அடங்கி உள்ளன.

குளித்தலை, ஓசூர், தளி, மதுரை தெற்கு, ராசிபுரம், குன்னூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, பெரம்பலூர், கிணத்துகடவு, தொண்டாமுத்தூர், வால்பாறை, பரமக்குடி, தென்காசி, போடி, ஒட்டபிடாரம், ஸ்ரீரங்கம், ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், ஆம்பூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

இது தவிர கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் 13 தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகளை பெற்று இருப்பதாகவும் அது தொடர்பான பட்டியலை தனியாகவும் பா.ஜ.க. தயாரித்து வைத்துள்ளது. மொத்தமாக அ.தி.மு.க.விடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற்று 50 இடங்களில் களம் இறங்க பா.ஜ.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

மீதம் உள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுப்பதற்கும் அந்த கட்சி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version