Site icon News now Tamilnadu

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) உடல் நலக்குறைவால் காலமானார்

மருத்துவ சேவைக்காக மகசசே, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளை வென்ற, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர், டாக்டர் சாந்தா (வயது 93) காலமானார்.

பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் சாந்தா, உடல்நலக்குறைவால் காலமானார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி, இன்று(ஜன.,19) அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, பழைய அடையாறு மருத்துவமனையில் வைக்கப்பட உள்ளது.

Exit mobile version