திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் அனுதினமும் கூட்டம் அலைமோதுவது வழக்கம்
தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அரங்கனின் ஆசி வேண்டி தினமும் கோவிலுக்கு ஆயிரக்கணக்கில்ஐயப்ப பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தருகின்றனர்
இந்நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் மூலஸ்தானத்தில் தரிசனம் பெற வந்த ஐயப்ப பக்தர்கள் ஒருவர் தாங்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் போது பலரையும் மாற்று வழியில் ஏன் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
இதில் கோபமடைந்த ஸ்ரீரங்கம் கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் நான்கைந்து பேர் சேர்ந்து அந்த ஐயப்ப பக்தரை தாக்கி உள்ளனர்

இதில் ஐயப்ப பக்தரின் முகம் முழுவதும் இரத்தம் வடிந்து உள்ளது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இந்த மனித தன்மையற்ற செயலை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்
காலம் காலமாக மூலஸ்தானத்தில் இது போன்ற ஒரு கொடூரத்தை நாங்கள் கண்டது இல்லை என்றும் பெருமாள் சன்னதியில் ரத்தம் சிந்துவது வரலாற்றில் இதுதான் முதன்முறை என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர்
இதற்கெல்லாம் மூல காரணம் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தான் என்று உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்
ஸ்ரீரங்கம் கோவில் ஆணையராக மாரியப்பன் பொறுப்பு ஏற்றதிலிருந்து பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்
இன்னும் சில தினங்களில் ஸ்ரீரங்கம் கோவில் முக்கிய நிகழ்வான வைகுண்ட வாசல் முக்கிய நிகழ்வு தொடங்க உள்ளது
இணை ஆணையர் மாரியப்பனின் தற்குறித்தனமான செயல்பாடுகளால் ஸ்ரீரங்கம் கோவிலில் இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் நடக்கப் போகிறது என்றும் கவலை தெரிவிக்கின்றனர்
உலகப் புகழ்பெற்ற திருத்தங்களில் ஒன்றான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சற்றும் பொருத்தம் இல்லாத ஒருவரை இணை ஆணையராக நியமனம் செய்த இந்து சமய அறநிலைத்துறைக்கு பெருமாளின் பக்தர்கள் தங்கள் கண்டனத்தையும் தெரிவிக்கின்றார்
தமிழக அரசுக்கும்திருச்சி மாவட்டம் நிர்வாகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் இணை ஆணையர் மாரியப்பன் உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் ஒரு தரப்பினர் போராட்டத்தில் குதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது