கடந்த 27ஆம் தேதி அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து ஆறு சிறார்கள் தப்பி ஓடிய விவகாரம் தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ராஜேஷ் கண்ணன் ஐபிஎஸ் அவர்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது..
மேலும் இக்கடிதம் பெற்ற மூன்று நாட்களுக்குள் ஆய்வு நடவடிக்கை குறித்த விவரத்தை அளிக்குமாறு கடிதத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் பல்வேறு குழந்தைகள் நலன் சார்ந்த ஆய்வு நடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி ஆனந்த் தமிழகத்தில் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பி ஓட்டம் குறித்து கூடுதல் கவனம் செலுத்திய நிகழ்வு பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது..