சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது. ரூ.10 முதல் ரூ.500 வரை விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் அறிவித்துள்ளது. ஜானி வாக்கர் விஸ்கி, பெய்லீஸ் ஐரிஸ், வோட்கா உள்ளிட்ட மதுபானங்களை டாஸ்மாக் இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. கவோல் இலா வகை விஸ்கி 750 எம்.எல் விலை ரூ.6,210ல் இருந்து ரூ.6,220ஆக உயர்கிறது. ஜானி வாக்கர் டபுள் பிளேக் விஸ்கி 750 எம்.எல் ரூ.4,740ல் இருந்து ரூ.5,260ஆக உயர்கிறது. இறக்குமதி மதுபானங்களின் அதிக விலை கொண்ட ஜானி வாக்கர் புளூ லேபிள் விஸ்கி ரூ.21,130ல் இருந்து ரூ.21,300ஆக உயர்கிறது.
- COVID-19
- அரசியல்
- ஆரோக்கியம்
- இந்தியா
- உலகம்
- சுற்றுச்சூழல்
- தமிழ்நாடு
- தொழில்நுட்பம்
- மருத்துவம்
- மாநிலங்கள்
- மாவட்டங்கள்
- வணிகம்