நடிகை தேவயானியின் கணவர் இயக்குநர் ராஜகுமாரன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்.
சொந்த ஊருக்கு அடிக்கடி செல்லும் தேவயானி தம்பதிகள், அருகில் உள்ள மாத்தூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.
அவர்களது தோட்டத்துக்கு அருகே ஒருவர் 2 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்காக பிளாட்டுகளாக மாற்றியுள்ளார்.
இதையறிந்த தேவயானி அந் நபரிடம் 2 ஏக்கர் வீட்டு மனைகளையும் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
பின்னர் அதை விவசாய நிலமாக மாற்றி தற்போது 2 ஏக்கரில் செண்டுமல்லி பயிரிட்டுள்ளார்.
தற்போது அந்த விவசாய நிலம் முழுவதும் செண்டு மல்லி பூத்துக் குலுங்குகிறது.
விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில், நடிகை தேவயானி, பிளாட்டுகளை விவசாய நிலங்களாக மாற்றி சாகுபடி செய்து வருவதை அப்பகுதி விவசாயிகள் பாராட்டி வருகின்றனர்.