விருப்ப ஓய்வு கோரி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உ.சகாயம், தமிழக அரசிடம் கடிதம் அளித்திருந்த நிலையில் அரசுப் பணியிலிருந்து புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.
தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக அவா் உள்ளாா். கடந்த அக்டோபா் 2-ஆம் தேதியன்று விருப்ப ஓய்வு கோரி அரசிடம் அவா் கடிதம் அளித்திருந்தாா்.
இதையடுத்து, அரசுப் பணியிலிருந்து புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த உ.சகாயம், கடந்த 2001-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். ஆவார்.