விராலிமலை தொகுதி மக்கள் நெஞ்சில் நீங்கா இடத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி கடந்த 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி கண்டவர் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள்…
விராலிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகள் குறிப்பாக விராலிமலை முருகன் கோயில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி இலுப்பூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் , தனி கல்வி அலுவலர், பல்வேறு அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல சொல்லில் அடங்கா திட்டங்களை நிறைவேற்றி பொதுமக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
தற்போது விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் திமுக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர், உள்ளிட்ட 15 க்கும் அதிகமான பல்வேறு தரப்பினர்கள் போட்டியிடுவதால் இந்தத் தொகுதியை சற்று பரபரப்பு மட்டுமின்றி தமிழகமே இந்த தொகுதியை உற்றுநோக்கு உள்ளது .
இருப்பினும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எண்ணிலடங்காத பல்வேறு நலத்திட்ட பணிகள் விராலிமலை தொகுதி மக்களுக்கு செய்து இருப்பதால் குறிப்பாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி தருணங்களில் கஜா புயல் தொடங்கி தற்போது கொரோனா பாதிப்பு வரை விராலிமலை தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..
இதனால் விராலிமலை தொகுதி மக்கள் நெஞ்சில் நீங்கா இடத்தில் உள்ளார் என்பது அனைத்து தரப்பினரும் மத்தியில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..