வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 900 கிலோ ரேஷன் அரிசி மூட்டையுடன் மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது
நாட்டறம்பள்ளி வழியாக ஆந்திரத்துக்கு வாகனங்களில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக நாட்டறம்பள்ளி வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி, வட்ட வழங்கல் அலுவலா் செல்வராஜ் மற்றும் வருவாய்த் துறையினா் கொத்தூா் பகுதியில் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்
அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் 30 மூட்டைகளில் 900 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. ஓட்டுநரிடம் நடந்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் குப்பம் மண்டலம் சாந்திபுரத்தைச் சோ்ந்த சூரியநாராயணன் என்பவருக்குச் சொந்தமான மினி லாரி என்பது தெரிய வந்தது. இதையடுத்து மினிலாரி, ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்த வட்டாட்சியா், அவற்றை திருப்பத்தூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தாா்