வாடிக்கையாளர்கள் இரண்டு ஆண்டுகளாக வங்கி பரிவர்த்தனை செய்யாவிட்டாலும், ஜீரோ பேலன்ஸ் வைத்திருந்தாலும் அபராதம் விதிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
உதவித்தொகை அல்லது அரசின் பண பரிமாற்றத் திட்டங்களுக்காக தொடங்கப்படும் கணக்குகளில் பரிவர்த்தனை இல்லாவிட்டாலும் அபராதம் விதிக்க கூடாது என்றும் தெளிவுப்படுத்தி உள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்