வரலாற்றில் முதன் முறையாக “திருச்சிராப்பள்ளி – டெல்லி” விமானசேவை.

950

வரும் அக்டோபர் 25ம் தேதி முதல் இண்டிகோ விமானநிறுவனமானது டெல்லிக்கு விமானசேவையை பெங்களூரு வழியாக வழங்குகிறது. பெங்களூரு வழியாக செல்லவிருக்கும் இந்த சேவையில் பயணிகள் பெங்களூருவில் இறங்கத் தேவையில்லை.

தற்போது “திருச்சிராப்பள்ளி – டெல்லி” ஒரு வழித்தடத்தில் மட்டுமே இந்த விமானசேவை வழங்கப்படுகிறது. வெகு விரைவில் “டெல்லி – திருச்சிராப்பள்ளி” வழித்தடத்திலும் இவ்விமானசேவை வழங்கப்பட உள்ளது.

வரும் அக்டோபர் 25ம் தேதி முதல் தினசரி இரவு 19.35க்கு புறப்படும் இண்டிகோ 6E 2289 விமானமானது பெங்களூரு வழியாக டெல்லியை அடுத்த நாள், அதாவது நள்ளிரவு 00.45க்கு சென்றடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here