ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் நடைபெற்றநிகழ்ச்சிக்கு முன்னர் கழிவு நீரில் இருந்து எரிபொருள் தயாரிக்கும்முறை குறித்துசெயல் முறை விளக்கம் அளித்தார்.
சாக்கடை கழிவு நீரை,சுத்திகரிப்பு செய்து கண்ணாடி குடுவையில் வைத்து,அதனுடன் இவரது கண்டுபிடிப்பான இரு கலவைகளை கலந்து எரிபொருளாக மாறுவதை செய்து காட்டினார். தான் கண்டுபிடித்த இந்த எரிபொருளுக்கு தன்னுடைய தாயின் நினைவாக “தமிழ் தேவி மூலிகை எரிபொருள்” என பெயரிட்டுள்ளதாக தெரிவித்தார். மூலிகை எரிபொருளை இருசக்கர வாகனத்தில் ஊற்றி இயக்கி காட்டினார்.
பின்னர் ராமர்பிள்ளை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனது 21 வருட கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. செய்தியாளர்கள் மத்தியில் தயாரிப்பு முறை குறித்து விளக்கப்பட்டுள்ளது.
என்னுடைய கண்டுபிடிப்பை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான முழு உரிமையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளேன். வரும் 18ம் தேதி முதல் வியாபார ரீதியாக மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வரும்என தெரிவித்தார்.