முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் மீது அவதூறு பரப்பிய கேரளாவை சேர்ந்த சர்மிளா என்பவருக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

525

தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராகவும், தற்போதைய விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருப்பவர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்

இவர் மீது கேரளாவை சேர்ந்த சர்மிளா என்ற பெண் சமூக வலைதளங்களில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் புகைப்படங்களை பயன்படுத்தி தவறான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வந்தார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கேராளாவை சேர்ந்த பெண் சர்மிளா மீது மான நஷ்ட மீது வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதியரசர் சதீஸ்குமார் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கினார்

தீர்ப்பில் கூறியாதவது:- “டாக்டர்.சி.விஜயபாஸ்கர் சமூகத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர் அவர் மீது தவறான அவதூறுகளை கூற கூடாது என்றும், மேலும் அவர் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தமைக்கு 1 கோடி ரூபாய் அபராதமும் விதித்ததோடு, வழக்கு செலவை அந்த பெண்ணே செலுத்த வேண்டும் என்றும், மேலும் சமூக வலைதளங்களில் அதாவது பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் தளங்களில் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் குறித்து பகிர்த்த தவறான பதிவுகளை உடனே நீக்க வேண்டும்” என பரபரப்பான தீர்ப்பை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here