முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம்..

623

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடியை அவர் நாளை காலை சந்தித்துப் பேசுகிறார்.

◽️இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள், நிதியுதவி தொடர்பான கோரிக்கை மனுவை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

◽️நிவர் புயல், புரெவி புயல் மற்றும் கடந்த வாரம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட சேதங்களுக்காக நிவாரண உதவி கோர இருப்பதாகக் கூறப்படுகிறது.

◽️இன்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசுகிறார்.

◽️அமித்ஷாவுடனான சந்திப்பு, கூட்டணி குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை தொடங்குவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

◽️நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க முதலமைச்சர் கோரிக்கை விடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here