Site icon News now Tamilnadu

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வாக்களிக்க சிரமமின்றி உதவிய புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலர்  திருமதி. உமா மகேஸ்வரி ஐஏஎஸ் அவர்கள் உத்தரவின்பேரில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது.. இதன் தொடர்ச்சியாக இன்று தேர்தல் நடைபெறுவதால் புதுக்கோட்டை நகராட்சியின் சார்பில் புதுக்கோட்டை  சட்டமன்றத் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ஏதுவாக வாக்களிக்கும் வகையில் வீல்சேர் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…

இது மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டையும் பெற்றுள்ளது

Exit mobile version