சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 2022 – 2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
2022 – 2023 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் நடத்துவது குறித்த கூட்டம் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஏற்கனவே நடைபெற்றது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பட்ஜெட் குறித்த வரைவு நிதிநிலை அறிக்கை ஏற்கனவே தயாராகி விட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் நிதி நிலை அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நிதிநிலை அறிக்கை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில் 2022 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து மார்ச் 18ஆம் தேதி அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் மேலும் தமிழக வேளாண் பட்ஜெட் மார்ச் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.