மானாமதுரையில் ரோட்டில் 200லி., பாலை ஊற்றி போராட்டம்!

782

சிவகங்கை அருகே வி.மலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழுவினர் தங்களது சங்கத்தை பதிவு செய்யக்கோரி, மானாமதுரை கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாலை ரோட்டில் ஊற்றி போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை அருகே வி.மலம்பட்டியில் உலகநாதன் மகளிர் குழுவைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள கூட்டுறவு பால் பண்ணையில், தாங்கள் வளர்க்கும் பசுக்களிடமிருந்து பால் எடுத்து ஊற்றி வந்துள்ளனர். இப்பாலுக்கான பணத்தை சரியாக பட்டுவாடா செய்யவில்லை எனக்கூறி மகளிர் குழு தலைவர் முத்துலட்சுமி தலைமையில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள், சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தனிடம் முறையிட்டனர்.

அவர் மானாமதுரையில் உள்ள துணை பதிவாளரை சந்தித்து முறையிடுங்கள் என கூறிவிட்டார். இதையடுத்து நேற்று காலை கறவை செய்து பாலுடன் மானாமதுரைக்கு வந்தனர். அங்கு துணை பதிவாளர் இல்லாததால், அலுவலகத்தை முற்றுகையிட்டு, கொண்டுவந்த 200 லிட்டர் பாலை ரோட்டில் ஊற்றி போராட்டம் நடத்தினர்.

மகளிர் குழு தலைவர் முத்துலட்சுமி கூறியதாவது, இச்சங்கத்தை பதிவு செய்து தருமாறு பல மாதங்களாக போராடி வருகிறோம். அதிகாரிகள் மறுக்கின்றனர். கூட்டுறவுபட்டியில் நாங்கள் வழங்கும் பாலை கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். இதை கண்டித்து போராட்டம் நடத்தினோம், என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here