மாணவர்களின் பாகுபலியே… – திண்டுக்கல்லில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து மாணவர்கள் ஒட்டிய போஸ்டர்.!

1181

திண்டுக்கல்லில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அரியர் மாணவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் கவனத்தை பெற்றுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவுடன் 144 தடைஉத்தரவும் போட்டுள்ளது. இதனால் வணிக நிறுவனங்கள் வழிபாட்டுத்தலங்கள் கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது.

பத்து பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறதா நிலையில் பத்தாம் வகுப்ப மாணவர்கள் அனைவரும் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. அதேபோல கல்லூரி மாணவர்களும் தேர்வெழுத முடியாத நிலை இருந்ததால் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் இறுதித்தேர்வு தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

அரியர் தேர்வுக்கு பணம் கட்டி காத்திருந்த மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே பாஸ் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் அதிகம் பேர் டிகிரியை முடிப்போமா நம் பெயருக்கு பின்பு ஒரு டிகிரியை போடுவோமா என அதிக அளவில் அரியர் வைத்திருந்த மாணவர்கள் ஏங்கிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வந்த இந்த அறிவிப்பால் சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் ஆனந்த கூத்தாடினர்.

இந்த சந்தோஷமான அறிவிப்புக்கு காரணமான தமிழக முதல்வருக்கு போஸ்டர் மூலமும் வலைதளங்களின் மூலமும் நன்றி தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியான திண்டுக்கல் நகர் முழுவதும் மாணவர்களின் பாகுபலியே அரியரை வென்ற அரசனே என முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here